( வி.ரி. சகாதேவராஜா)
10லட்சரூபா
பெறுமதியான திறன் பலகைகளை கனடாவில் வாழும் முனைக்காட்டை சேர்ந்த
பொறியியலாளர் கோபாலபிள்ளை துரைராஜசிங்கம் ( ராஜன்) அவர்களினால் அன்பளிப்பு
செய்யப்பட்டது.
முனைக்காடு கிராமத்திலுள்ள பாடசாலைகளுக்கு 10 இலட்சம் பெறுமதியான திறன் பலகை ( smart board) நன்கொடையாக வழங்கப்பட்டது.
முனைக்காடு
கிராமத்திலே இருக்கின்ற முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கும்
முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான திறன்
பலகை ( smart board ) கள் அண்மையில் வழங்கப்பட்டிருந்த நிலையில்
பொறியியலாளர் ராஜன் அண்மையில் பாடசாலைக்கு விஜயம் செய்திருந்த போது அவற்றை
உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.
பொறியியலாளர்
ராஜன் கல்லடி சிவானந்தா வித்தியாலயத்தில் பயின்று வீதி அபிவிருத்தி
அதிகாரசபையில் பத்தன நுவரெலியா போன்ற பகுதிகளில் பிரதம பொறியியலாளராக
பணியாற்றியிருந்தார்.
அத்துடன்
ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும்
விதத்தில் பயன்படுத்தப்படுகின்ற இவ் திறன் பலகை ( smart board) களை
கையாள்வது தொடர்பிலான கருத்தரங்கும் ராஜன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
Post A Comment:
0 comments so far,add yours