கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் பொலிசார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிசார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று புதன்கிழமை (23) பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிசாருக்கிடையே கடந்த 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த அவரை பணியில் இருந்து இடைநிறத்தப்பட்டுள்ளார் .
இதனை தொடர்ந்து கடந்த 11ம் திகதி ஏறாவூரைச் சோந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில்; வேலைபார்த்துவரும் கடையில் வேலை முடித்துகொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இனைஞனை முச்சக்கரவண்டியில் வீதிசோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிசார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6500 ரூபாவை பறித்தெடுத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிசாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டடு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
அதேவேளை கடந்த 20 ம்திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றிவந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையல் அவரை பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்
இவ்வாறு குற்றச் செயல்காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிசார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours