(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரனையுடன் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய,
22 அணிகள் பலப்பரீட்சை நடாத்திய மாபெரும் உதைப்பந்தாட்ட சமரில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணியினர் சாம்பியனாக மகுடம் சூடினர்.
இவ்விறுதிப்
போட்டி கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நேற்று (26)
இரவு இடம்பெற்றது. இதில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணியினரை எதிர்த்து
கல்முனை சனி மெளண்ட் விளையாட்டுக் கழகம் மோதியது. மிகவும் விறுவிறுப்பாக
இடம்பெற்ற இப்போட்டியில் 5 : 0 என்ற கோல் கணக்கில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.
அணியினர் வெற்றியீட்டி கிண்ணத்தை சுவீகரித்தனர்.
அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அல்-ஹாஜ் வை.கே. றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு
பிரதம
அதிதியாக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ஆசிய
உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினருமான ஜஸ்வர் உமர், கௌரவ
அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கைபரப்பு செயலாளருமான கே.எம்.ஏ. ஜவாத்
ஆகியோருடன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவர்களுள்
ஒருவர் மற்றும் கல்முனை சனி மெளண்ட் விளையாட்டுக் கழகத்தின் செயலாளருமான
எம்.ஐ.எம்.அப்துல் மனாப்,
மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டு கழகங்களின் உறுப்பினர் கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டியில்
வியக்க வைக்கும் ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை திகைக்க வைத்து வெற்றிக்
கிண்ணத்தைக் கைப்பற்றிய கிழக்கு மாகாண சம்பியன் அணியினருக்கு
கல்முனை அப்துல்லாஹ் மென்ஸ் நிறுவனத்தினரால்
ரூபாய் ஒரு இலட்சம் அன்பளிப்பாக சம்பியன் அணிக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours