நூருல் ஹுதா உமர்
மனித மேம்பாட்டு அமைப்பு மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை இளைஞர்களுக்கான 5S முகாமைத்துவம் சம்பந்தமான பயிற்சி பட்டறை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும் மாவடிப்பள்ளி YMMA யின் தலைவருமான எஸ்.ஏ. முஹம்மட் அஸ்லம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம். அசாத், அகில இலங்கை YMMA பேரவையின் தேசிய உப தலைவர் எம்.ஐ. உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக வைத்தியசாலையின் திட்டமிடல் அதிகாரி டாக்டர் எ.ஆர். நியாஸ் அஹமட் , அகில இலங்கை YMMA பேரவையின் அப்பாறை மாவட்ட பணிப்பாளர் எம்.ஐ.எம். றியாஸ், தாதிய பரிபாலகர் டி. எல். அப்துல் ரசூல், தாதிய பரிபாலகி சாஜிதா எம்.ஜெமீல், தர முகாமைத்துவ பிரிவினுடைய தாதிய உஸ்தியோகத்தர் எம்.ஐ.எம். அஸ்ஹர், சம்மாந்துறை YMMA கிளையின் தலைவர் எம். ஆர்.சம்சுதீன், அக்கரைப்பற்று YMMAயின் தலைவர் எ.எ.பைரூஸ், அட்டாளைச்சேனை YMMA யின் செயலாளர் எ.எல். கியாஸ்டீன் என பலர் கலந்து சிறப்பித்ததோடு சாய்ந்தமருது, சம்மாந்துறை, நாவிதன்வெளி, அட்டாளைச்சேனை போன்ற பிரதேசங்களின் இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு விரிவுரை மற்றும் செயற்பாட்டு ரீதியிலான பயிற்சிகளை பெற்றுக் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours