(அஸ்ஹர் இப்றாஹீம்)


கல்குடா "Don't touch "  விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் (6)  இடம்பெற்ற Eastern T 10 ( ஈஸ்டன் ரி-10 )  Blast கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில்  சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்று பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.  

கிழக்கு மாகாணத்தைச்  சேர்ந்த திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்ட அணிகளுடன்  பொலனறுவ மாவட்டத்தைச் சேர்ந்த  அணிகளும் மொத்தம் 32 அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்றன. 

இறுதிப் போட்டியில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகமும் சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சையில் இறங்கின. 

முதலில் துடுப்பாடிய சம்மாந்துறை அணியினர் 10 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுக்களை 
இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகம் 09 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை 
இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று  சாம்பியனானது.

இப்போட்டியில் மிகச்சிறப்பாகத் துடுப்பாடிய முஹம்மட் றிபான் ஆட்டமிழக்காமல் 66 (26) ஓட்டங்களைப் பெற்றதுடன் 17  பந்துகளில் 51 ஓட்டங்களை மிக வேகமாகக் குவித்து  ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார். 

 போட்டித் தொடர் நாயகனாகவும் சிறந்த பந்து வீச்சாளராகவும் எஸ்.எம்.சுஜான் தெரிவு செய்யப்பட்டார்.

இச் சுற்றுப் போட்டியில் சம்பியனான சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தினருக்கான சம்பியன் கிண்ணம் மற்றும் பரிசில்களை பிரதம அதிதி சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் வழங்கி வைத்தார். 

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours