பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதிக்கு அருகில் இன்று (14) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று தும்முல்லயிலிருந்து வந்த லொறியுடன் மோதி வீதியில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விபத்தின் போது பஸ்ஸில் சுமார் 15 பயணிகள் இருந்தனர், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்விளக்கு இன்றி பஸ் இயங்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
Post A Comment:
0 comments so far,add yours