(கனகராசா சரவணன்)


யாழ் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்கர்களின் கூலிப்படைகளாக பெண்களின் ஆடைகள் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து  தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டு தாக்குதல், பொருட்களை அடித்து சேதப்படுத்தி, வாகனங்களை தீயிட்டு எரித்தல் போன்றவற்றின் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 9  பேரை இன்று வெள்ளிக்கிழமை (18) கைது செய்துள்ளதுடன் வாள்,சுட்டியல்,கோடரி,  மோட்டர் சைக்கிளக்கள் எனபவற்றை மீட்டுள்ளதாக மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக ஒரு குழுவினர் யாழ் மாவட்டத்தில் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ளல் பெற்றோல் குண்டு தாக்குதல் வாகனங்களை தீயிட்ட சம்பவங்கள் தொடர்ச்சிய இடம்பெற்று வந்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டுவந்த கூலிப்படை தொடர்பாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு;கு கிடைத்த தகவலையடுத்து .மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான இன்று கூலிப்படையினர் தலைமறைவாகி இருந்தனர்.

குறித்த இடத்தை சுற்றிவளைத்து 9 பேரை கைது செய்ததுடன் 3 மோட்டார் சைக்கிள், 2 வாள்கள், ஒரு கோடாரி ஒரு சுத்தியல் ஆயுதங்களும் வீடுகளில் மீது மேற்கொண்ட தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட வீடியோக் காட்சிகளை வெளிநாட்டுகளில் உள்ள முகவர்களுக்கு அனுப்புவதற்காக வைத்திருந்த வீடியோ காட்சிகளை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பும் முகவர்களுடாக அவர்களிடம் பணம் பெற்று கூலிப்படையாகச் செயற்பட்டு வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவர்கள் அண்மையில் கள்ளியங்காட்டுப் பகுதியில் பெண்களின் ஆடை அணிந்து வீட்டினை நாசப்படுத்தி எரித்தமை தொடர்பிலும்  விஸ்வநாதன் என்பவரிடமிருந்து 2 லட்சம் ரூபா பணத்தைப் பெற்று பெற்று மைதானப் பிரச்சினைக்காக வன்முறையில் ஈடுபட்டதுடன்

கீரிமலைப் பகுதியில் ஒரு லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுத் தாக்குதல் மேற்கொண்டமை, திருநெல்வேலியில் மருத்துவர் வீட்டின் மீது  பெற்றோல் குண்டுதாக்குதலுக் மேற் கொண்டதற்காக ஒரு லட்சம் ரூபா பணம் பெற்றுக்கொண்டமை கோப்பாய் பால்பண்ணை பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீதான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் போதைப்பொருளுக்கு அடிமையான இவ்கள் போதைப் பொருக்காக பணம் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்வர்களையும் சான்று பொருளுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours