(கனகராசா சரவணன்)


திருகோணமலை சீனன்வெளியிலிருந்து கடலில் மீன்பிடிக்க படகில் நேற்று வெள்ளிக்கிழமை (11) மாலை சென்ற மீனவர் ஒருவர் இதுவரை கரைதிரும்பாத நிலையில் காணாமல் போயுள்ளதாக ஈச்சலம்பற்று பொலீசார் தெரிவித்தனர்.

பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் சம்பவதினமான நேற்று மாலை 5 மணிக்கு வழமைபோல மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்று இரவு 11 மணிக்கு கரைக்கு திரும்புவார். இந்த நிலையில் கடலுக்கு சென்றவர் இன்று பகல் வரையம் கரைக்கு திரும்பதா நிலையில் அவரின் கையடக்க தொபேசியை தொடர்பு ஏற்படுத்திய போதும் அது இயங்கதாதையிட்டு அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனா.

இதேவேளை லங்கா பட்டுண கடற்படை முகாமில் இது தொடர்பில் முறையிடப்பட்டுள்ள போதிலும் கடற்படையினரின் ராடரில் எந்தப் பதிவுகளும் இல்லை எனவும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகளும் இல்லை என தெரிவித்துள்ளதாகவும் இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டு பிடிக்க உதவ வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours