சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டானைப் பகுதி மக்களுக்கு சுவிஸ் நாட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட உடுதுணிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று 13.08.2023 ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் நடைபெற்றது.

சுவிஸ் உதயம் அமைப்பானது வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மக்களின் நலன்கருதி பல்வேறுபட்ட உதவிகளை முன்னெடுத்துவரும் நிலையில்  இவ் உதவி முன்னெடுக்கப்பட்டது


இந் நிகழ்வில்  சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச் சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் அமைப்பின் கிழக்கு மாகாணக்கிளையின் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் கிழக்குமாகாணக்கிளையின் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன், உறுப்பினர் அகிலன் ஆகியோர் கலந்துகொண்டு  உடுதுணிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours