கல்முனை முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவு செய்யப் பட்டுள்ளார்.
சிறு
வயது முதல் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு பல்துறைகளிலும் திறமையை காட்டி
வந்த, கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய
பாடசாலையின் பழைய மாணவனும், கல்முனை லெஜன்ட் கழகத்தின் சொலிட் வெபன் (Solid
Weapon) என்று அழைக்கப்படும் முஹம்மட் அஹ்னாபின்
உள்ளூர் கிரிக்கெட் பயணம் கல்முனை லெஜெண்ட்ஸ் அணியில் தொடங்கியதுடன், அவ்வணியின் பல்வேறு வெற்றிக்கு அடித்தளமிட்ட சிறந்த வீரராகும்.
இவரது
கிரிக்கெட் விளையாட்டு மாவட்ட, மாகாண மட்டங்கள் மற்றும் தேசியத்
தெரிவுகளில் முதன்மை காட்டி, கொழும்பு சாஹிரா கல்லூரி, கொழும்பு மோர்ஸ்
(MOORS) அணி, மத்திய கிழக்கில் கட்டார் யுனைட்டெட் சலஞ்ஜெஸ் அணி (Qatar
United Challengers) என கட்டார் உள்ளகப் போட்டிகளில் பல திறமைகளைக்காட்டிய
சிறந்த கிரிக்கெட் வீரராவார்.
தேசியத்தில்
கண்ட கனவை சர்வதேசத்தில் நனவாக்கி, கட்டார் தேசிய அணிக்காகத் தெரிவு
செய்யப்பட்டிருக்கின்ற லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் SOLID WEAPON
முஹம்மட் அஹ்னாபின் விளையாட்டு எதிர்காலம் சிறப்பாக அமைந்து, இன்னும் பல
சாதனைகள் புரிந்திட வேண்டும் என லெஜெண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் தமது
வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours