சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைஞர் கழகங்களுக்கிடையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஆண்,பெண் இருபாலாருக்குமான கலப்பு கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் குருக்கள்மடம் இளைஞர் கழகம் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 3 இளைஞர் கழகங்களும், ஆரயம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 3 இளைஞர் கழகங்களுமாக மொத்தம் 6 இளைஞர் கழக அணிகள் இச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் குருக்கள்மடம் இளைஞர் கழக அணியும், களுதாவளை இளைஞர் கழக அணியும் கலந்து கொண்ட நிலையில் 2 : 1 என்ற புள்ளி அடிப்படையில்
குருக்கள்மடம் இளைஞர் கழக அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இளைஞர் சேவை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோஸ்தர்கள், விளையாட்டு அதிகாரிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வெற்றி பெற்ற இளைஞர் கழகங்களுக்கும், பங்குபற்றிய இளைஞர் கழகங்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours