நூருல் ஹுதா உமர்
கமு/சது/வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (85) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை, பாதணி என்பன வழங்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அந்தோனி சுதர்சன் தலைமையில் இன்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இணைந்த கரங்கள் அமைப்பு உறவுகளின் நிதி பங்களிப்பு மற்றும் மில்ரோகித் ராஜ்குமார் அவர்களின் நிதி பங்களிப்புடன் இம் மாணவகளுக்கான கற்றல் உபகரணங்கள், பாதணி மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர் இ. தியாநிதி, ராஜ்குமார் ஜெயச்சித்திரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். மேலும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான காந்தன், சுரேஷ், பாடசாலையின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours