(அஸ்ஹர்  இப்றாஹிம்)



கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் ஆண்களுக்கான அனைத்து வயது பிரிவுகளிலும் சம்பியன் பட்டத்தை வென்று மீண்டும் வரலாற்று சாதனையை புரிந்து, கிழக்கின் சதுரங்க ஜம்பவான்கள் என  மீண்டும் நிரூபித்துள்ளனர் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கடந்த 2023.08.05 மற்றும் 2023.08.06 ம் திகதிகளில் திருகோணமலை சிங்கள மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு  மாகாண மட்ட சதுரங்க போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய  கல்லூரி  மாணவர்கள் 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் 20வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் 1ம் இடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மடட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

20 வயது பிரிவில் ஐ.எம்.சயான் ஷாஹி, எம்.என்.ஷஹீன் அஹமட், எம்.ஏ.தமீம், எம்.ஏ.ஏ..அதீப்,  எம்.ஏ.ஏ.அழ்பர், எம்.கே.ஏ.எஸ்.அனாப்,  ஏ.எம்.சப்கி ஆகியோரும், 17 வயது பிரிவில் ஐ.எம். சம்லி ஷாஹி, ஏ.எஸ்.ஏ.மிஜ்வாத்,  எம்.என்.எம்..றீமாஸ், ஐ.கே.எம்.ஆகில் கான், எம்.இஸட்.எம். சனீப், எம்.ஜே.ஐ..சஹ்மி ஆகியோரும் போட்டியில் கலந்து கொண்டனர். 

சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களை பயிற்றுவித்து போட்டிக்காக அழைத்துச் சென்ற பொறுப்பாசிரியர்கள் எம்.வை.எம்.றகீப், எச்.எம்..ஜெமீன், பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.எம்.சுஹ்தான் மற்றும் மற்றும் ஏ.எம்.சாகீர் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக கல்லூரி அதிபர்.எம்.ஐ.ஜாபிர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours