மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிற்கும் இலங்கைக்காண உலக
உணவு திட்ட பணிப்பாளர் அப்தூல் சித்திக்கிற்கும் இடையிலான விசேட
சந்திப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (21) இடம் பெற்றது.
உணவு
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உலக உணவு திட்ட நிறுவனம் அரசாங்கத்துடன்
இணைந்து பல செற்றிட்டங்களை மட்டக்களப்பில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
உலக
உணவுத்திட்டத்தினால் போதிய வருமானம் அற்ற தெரிவு செய்யப்பட்ட
குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் விநியோகம் மற்றும் மக்களின்
வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக கால்நடைகளும் வழங்கப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இதன்போது உலக உணவுத் திட்டத்தினால்
மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டத்திற்காக அரசாங்க அதிபர் இலங்கைக்கான
பணிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.
அரசாங்க அதிபரினால் தற்போதைய
வறட்சியான காலநிலை காரணமாக மாவட்டத்தின் பாதிப்புக்களை இக்
கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.
Post A Comment:
0 comments so far,add yours