(அஸ்ஹர் இப்றாஹிம் )

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் மற்றும் நிந்தவூர் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் கடலரிப்பை தடுப்பதற்காக கடற்கரை ஓரங்களில் கருங்கல்லிலான தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகின்றது. 

அண்மைக்காலமாக திருக்கோவில் மற்றும் நிந்தவூர்  பிரதேசங்களில் கடலரிப்பை   நிதந்தரமாக 
தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக  கடலோரம் பேணல் மற்றும் கடல் மூலவள முகாமைத்துவ திணைக்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜெஸூர் தெரிவித்தார். 

இப்பிரதேசத்தில் கடலரிப்பை தடுப்பதற்காக முதற்கட்டமாக ஏற்கனவே தற்காலிக மணல் மூடை இடப்பட்டுள்ளதாக இணைப்பாளர் மேலும் தெரிவித்தார். 

கடலரிப்பு தொடர்ச்சியாக ஏற்பட்டு வருவதால் அப்பிரதேசத்தில் வாழும் பொது மக்களும்,  மீனவர்களும் பலவிதமான அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதோடு பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதேவேளை சாய்ந்தமருது,  மாளிகைக்காடு பிரதேசங்களிலும் இவ்வாறான பாரிய கடலரிப்பு காரணமாக கடலோர பிரதேசங்கள் நாளுக்கு நாள் காவு கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours