(எம்.எம்.றம்ஸீன்),சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளிலுள்ள இடர்பாடுகளை முன்வைத்து இன்று(24 )ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அவற்றில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்கி கற்பதற்கு எந்த அடிப்படை வசதியை, மலசலகூட வசதியோ இன்மையால் தினசரி பலவிதமான இன்னல்களை அனுபவித்து வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தூர இடங்களில் இருந்து வந்து கல்வி பயிலும் மாணவிகள் தனியார் வீடுகளில் தங்கியுள்ளனர்.இருந்தும் அவர்களும் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக அதிபர் மற்றும் நிர்வாகத்தினரிடம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமையிலான தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours