(எஸ்.அஷ்ரப்கான்)
ஆசிய
மன்ற நிதி உதவியின் கீழ் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தினால்
அமுல்படுத்தப்படுகின்ற " உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகளை வினைத்திறன்
மிக்கதாக மாற்றியமைக்க இளைஞர்களை உள்ளுராட்சி மன்ற ஆலோசனை குழுவில்
இணைக்கும் வேலைத்திட்ட செயலமர்வு திருகோணமலை பட்டினமும், சூழலும் பிரதேச
சபை மண்டபத்தில் பிரதேச சபை பிரதம முகாமைத்துவ உதவியாளர் என். சிவகுமார்
தலைமையில் இரண்டாவது நாளாக நடைபெற்றது.
இலங்கை
உள்ளுராட்சி மன்றங்கள் சம்மேளன பிரதம நிறைவேற்று அதிகாரி ஹேமந்தி
குணசேகரவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இலங்கை உள்ளுராட்சி மன்றங்கள்
சம்மேளன பிரதம செயற்பாட்டு அதிகாரி கலன வீரசிங்கவின் நெறிப்படுத்தலில்
நடைபெற்ற இந்த செயலமர்வின் பிரதான வளவாளராக உள்ளுராட்சி மன்றங்களின்
நிகழ்ச்சித்திட்ட ஆலோசகர் எம்.ஐ.எம். வலீத் கலந்து கொண்டார்.
காலை
நேர அமர்வில் உள்ளுராட்சி மன்றத்தின் பல பிரிவுகளையும் சேர்ந்த அதிகாரிகள்
கலந்து கொண்டு தமது பிரதேச சபையின் தொழிற்பாடு, நடைமுறைகள் தொடர்பில்
கலந்துரையாடினர்.
மாலை
வேளையில் உள்ளுராட்சி சபைகளினால் குடிமக்களின் கருத்துக்களின் அடிப்படையில்
வழங்கப்படும் பொது சேவைகளை பகுப்பாய்வு செய்தல், அனைத்து குடிமக்களுக்கும்
சமமான முறையில் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கியத்துவம்
தொடர்பிலும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours