மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதற்கு நல்லதோர் உதாரணம் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தமிழ் அமைச்சராக இருந்த போதும் மூன்றில் இரண்டு பகுதி கடல் வளம் கொண்ட வட மற்றும் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையில் உள்ளார். இதே நிலைமையில் தான் இங்குள்ள அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் காணப்படுகின்றனர்.


வசதி படைத்தோருக்கு வரிச் சலுகையும் வசதி இல்லாத மக்களுக்கு வரியுமாக இவ் நாட்டு சட்ட மூலங்கள் திருத்தியமைக்க படுகின்றது. நேற்று கொண்டுவரப்பட்ட கசினோ சட்டமூலம் மூலம் கசினோவுக்கு வரி விலக்களிக்கப்படு நீருக்கான வரி அதிகரித்துள்ளார்கள். இதனால் பாதிக்கப்பட போவது வரிச்சுமையை சுமக்கப் போவது எமது மக்கள் தான்.

மகாவலி அமைச்சரிடம் நேற்றைய தினம் எமது பிரதேசங்களில் நிகழும் காணி அபகரிப்புக்கள் பற்றி குறிப்பிடும் போது அவை நாவலடியாக இருக்கட்டும் மயிலத்தமடு மாதவனை பிரதேசமாக இருக்கட்டும். அதை பார்ப்போம் தம்பி என பொறுப்பில்லாமல் பதில் சொல்கின்றார்.ஓர் பொறுப்பு வாய்ந்த அமைச்சர் இவ்வாறு பொறுப்பில்லாமல் பதில் கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. அதற்கான விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஜனாதிபதி எமக்கான மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களையும் தருவதாக உறுதி அளித்துவிட்டு தற்போது சொல்கின்றார் பாராளுமன்றத்தின் மூன்றின் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் தர முடியாது என்றும் தன்னால் தீர்மானம் எடுக்க முடியாது என்றும். நேற்றைய தினம் இதற்கான எதிர்பையும் நான் வெளிக்காட்டி இருந்தேன் மற்றைய சட்ட மூலங்களை தமிழ் மக்களுக்கு எதிரான சட்ட மூலங்களை கொண்டு வருவதற்கு பாராளுமன்ற பெரும்பான்மை உண்டு ஆனால் தமிழ் மக்களுக்கு நன்மை தரும் விடயங்களை கொண்டு வருவதற்கு இடமில்லை என்கின்றார். ஜனாதிபதியின் இவ் செயல்பாடானது எமது மக்களை ஏமாற்றும் கண்துடைப்பு செய்யும் செயல்பாடாகும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours