(எம்.ஏ.றமீஸ்)

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பொலிஸ் தின நிகழ்வு பொத்துவில் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபள்யு.செனவிரத்ன ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விபோது அம்பாரை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.ஜெயபத்ம, உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர் தேசப்பிரிய,  பொதுமக்கள் பாதுகாப்பு சமூகப்பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.சீ.எம். அலிமுதீன், உலமாசபைத் தலைவர் மௌலவி முகைதீன் பாவா உள்ளிட்ட துறைசார் முக்கியஸ்தர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.
இதன்போது நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் புரிந்துணர்வுடனும் செயற்பட வேண்டுமென விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், பள்ளிவாலில் சமூகமளித்த அனைத்து இன சமூகப் பிரதிநிதிகள் மத்தியில் ஒற்றுமை மற்றும் சமாதானம் போன்றவற்றை வலியுறுத்திய விஷேட சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் போது பொத்துவில் பிரதேசத்தில் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரின் அறுவைச் சிகிச்சைக்காக திரட்டப்பட்ட 20 இலட்சம் ரூபா பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. பொத்துவில் சமூக அமைப்புக்கள், ஆர்.எம்.நகர பள்ளிவாசல் நிருவாகத்தினர் இணைந்து பொது மக்களிடத்திலிருந்து சேகரித்த 20 இலட்சம்  ரூபா பணத்தொகையே இவ்வாறு பொலிசாரினூடாக இணைந்து வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours