(அஸ்ஹர் இப்றாஹிம்)
மாவனெல்ல பதுரியா மத்திய கல்லூரிக்கு அவசிய தேவையாக இருந்த அபிவிருத்தி திட்டங்கள் சில பூர்த்தி செய்யப்பட்டு, பதுரியா மத்திய கல்லூரி அதிபர் ஏ.எல் .ஏ .ரஹ்மான் அவர்களிடம் பழைய மாணவியர் சங்கத்தால் அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
பழைய மாணவியர் சங்கத்தின் செயலாளர் டொக்டர் எம்.ஜே.எப்.யமீனா அவர்களோடு ஒன்றிணைந்து செயல்படும் நிர்வாக குழுவினர் இவ் வேலைத்திட்டத்தை பொறுப்பெடுத்து குறுகிய காலத்தில் மிகவும் சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.
இவற்றுள் பாடசாலையின் பிரதான நுழைவாயில் ,புனரமைப்பு செய்யப்பட்ட வாசிகசாலை,மாணவ தலைவர்களுக்கான 50 மேலங்கிகள், கேட்போர் கூடத்திற்கான போடியம் ,புரட்டி (inverter),புதிய கட்டிடத்திற்கான மலசலகூட நிர்மாணம்,என்பனவே இவ்வாறு கையளிக்கப்பட்டவையாகும்.
இந் நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக விவசாய பொறியியல் பீட விரிவுரையாளர் கலாநிதி எம். ஐ.எம் .மௌஜுத் ,தேசிய நூலக பயிற்றுவிப்பாளர் எம். என். எம். சிஹாம், பாடசாலை கட்டிட நிர்மாண சங்கஉறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பாடசாலை பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை உப அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours