.
காரைதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு நீரேரியில் வளர்ந்துள்ள ஒரு வகைப் புல்லின் பூவிலிருந்து வெளியாகும் வெள்ளை நிறமான சிறு துகள்கள் இப்பிரதேசத்திலுள்ள பொது மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
கடந்த பல வருட காலமாக குறிப்பிட்ட நீரேரியில் வளர்ந்துள்ள இப் புல் பற்றைக் காடாக காணப்படுவதால் தோணாவினூடாக செல்லும் வெள்ள நீர் பாலத்தினூடாக வடிந்து செல்ல விடாமல் தடைசெய்கின்றது. இதனால் அருகிலுள்ள பிரதேசம் மழை காலங்களில் வெள்ளக் காடாக காட்சியளிக்கும்.
இப் புல் பற்றைக்குள் விஷ ஜந்துக்கள் , நோய்களை பரப்பக்கூடிய நுளம்புகள் அதிகமாக பெருகிக் காணப்படுகின்றன.
மாளிகைக்காடு பாலத்திற்கு அருகில் அல் ஹுசைன் வித்தியாலயம் அமைந்திருப்பதால் பாடசாலை மாணவர்களும் , ஆசிரியர்களும் நாளாந்தம் இத் துகள்களினால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
கடுமையான காற்று வீசும் போது புல்லின் பூவிலிருந்து வெளியாகும் துகள்கள் காற்றில் எடுத்துச் செல்லப்பட்டு உடம்பில் படும்போது ஒருவகைத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours