(எஸ்.அஷ்ரப்கான்)
நடைபெற்று
முடிந்த மாகாணமட்ட சமூக விஞ்ஞான போட்டியில் அம்பாறை மாவட்டம், ஒலுவில்
அல்-ஹம்றா மகா வித்தியாலய மாணவி ஏ.எப். இஸ்ரா வெற்றி பெற்று தேசிய
மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இம்மாணவியை
பாராட்டி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (11) பாடசாலையில் அதிபர்
அஷ்ஷெய்க் யூ.கே. அப்துல் ரஹீம் தலைமையில் இடம்பெற்றது. இங்கு சமூக விஞ்ஞான
பாட இணைப்பாளர், உதவி அதிபர் ஏ.ஜே.எம்.றினீஸ் மற்றும் அதிபர் யூ.கே.
அப்துல் ரஹீம் இணைந்து
மாணவியை பாராட்டி கௌரவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours