கலாநிதி.இராஜ்குமார்
பாரதி நேற்றுமுன்தினம் (4) திங்கட்கிழமை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன்
சிறுவர் ஆச்சிரமத்திற்கு விஜயம் செய்தார்.
அவரை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் இல்லத்தின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் வரவேற்றார்.
கிழக்கு
பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அடிகளார் அழகியல் கற்கை நிறுவகத்தின்
பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி பேராசிரியர் சி. மௌனகுரு உதவி
கல்வி பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை
ஜெயசிறில் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இல்ல மாணவர்களுடன் அளவளாவிய கலாநிதி இராஜ்குமார் பாரதி பாரதியார் பாடல்களை நினைவுகூர்ந்தார்.
இதேவேளை
,மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன் கலாநிதி.இராஜ்குமார் பாரதி
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழவகியற் கற்கைகள் நிறுவனத்திற்கும் விஜயம்
செய்தார்.
செப்டம்பர் மாதம் 11ஆந்திகதி பாரதியாரின் நினைவு நாளாகும்.
இந்நிகழ்வினை
முன்னிட்டு செப்டம்பர் மாதம் 04ஆந்திகதி சுவாமி விபுலானந்த அழகியற்
கற்கைகள் நிறுவகத்தில் மஹாகவி பாரதியாருடைய கொள்ளுப்பேரன்
கலாநிதி.இராஜ்குமார் பாரதி வருகை தந்தார்கள்.
நிறுவகத்தின்
பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வுக்கு, ஆன்மீக அதிதியாக வணக்கத்துக்குரிய நீலமாதவனானந்தஜீ மஹராஜ்
முன்னிலை அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசா
பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம்
சிறப்பு அதிதியாக இளைப்பாறிய பேராசிரியர் சி. மௌனகுரு ஆகியோர் கலந்து
சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில்
பாரதியாருடைய கவி வரிகளில் உருவாக்கப்பட்ட பாடல்களுக்கு இசையூட்டப்பட்டு
இசை ஆற்றுகைகளாகவும் நடன ஆற்றுகைகளாகவும் இடம்பெற்றன.
அத்தோடு,
மஹாகவி பாரதியாருடைய கொள்ளுபேரனாகிய கலாநிதி.இராஜ்குமார் பாரதி அவர்களின்
மட்டக்களப்பு வருகையைத் தடம்பதிக்கும் முகமாக சுவாமி விபுலானந்த அழகியற்
கற்கைகள் நிறுவகத்தின் முன்னால் அமைந்துள்ள பிரதான வீதியில் சுவாமி
விபுலானந்தரினால் ஆராய்ச்சி செய்யப்பட்ட யாழ் ஒன்றும் திறந்து
வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வி.ரி.சகாதேவராஜா
Post A Comment:
0 comments so far,add yours