( வி.ரி.சகாதேவராஜா)
சர்வதேச
கரையோர பாதுகாப்பு மற்றும் தூய்மைப்படுத்தல் வாரத்தினை முன்னிட்டு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட
நிகழ்வானது நேற்றைய தினம் (2023.09.19) பெரியகல்லாறு மற்றும் களுவாஞ்சிகுடி
கிராம சேவகர் பிரிவுகளில் தூய்மைப்படுத்தும் சிரமதானம் ஆரம்பமாகியது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் ஆலோசனை மற்றும்
வழிகாட்டுதலில் இடம்பெற்ற இந் நிகழ்ச்சித்திட்டமானது கிழக்கு மாகாண
ஆளுனரின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் கிழக்கு கரையோரங்களை
தூய்மையாக பேணுதல் எனும் திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில்
அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த
நிகழ்வில் பொதுமக்களுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கடல்
சார் சூழல் அதிகார சபை மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ஆகியோரின்
பங்குபற்றுதலுடன் கரையோரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours