(எம்.ஏ.றமீஸ்)
'உடல் ஆரோக்கியத்திற்கான சைக்கிள் ஓட்ட சம்பியன்சிப் போட்டி' எனும் தொனிப் பொருளின் கீழ் இடம்பெற்ற இச்சைக்கிள் ஓட்டப் போட்டியானது 78 கிலோமீற்றர் தூரத்தினை ஓடிக் கடக்கும் போட்டியாக அமைந்தது.
அறுகம்பை பகுதியில் உள்ள வெளிநாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் உள்நாட்டு சைக்கிள் ஓட்ட வீர வீராங்கனைகள் எனப் பலர் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.
அறுகம்பை பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இச்சைக்கிள் ஓட்டப் போட்டியானது கோமாரி, சங்கமன்கண்டி, விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பிரதேசங்கள் ஊடான பயணப் பாதையினைக் கொண்டு, மீளவும் பொத்துவில் அறுகம்பை பகுதியினை முடிவுறும் பகுதியாக கொண்டமைந்தது.
இச்சைக்கிள் ஓட்டப் போட்டியின் போது பொத்துவில் பிரதேசத்தினைச் சேர்ந்த சைக்கிள் ஓட்ட வீரர் கே.சுல்பிகார் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டார். இரண்டாமிடத்தினை ஏ.எம்.பௌஜி என்ற வீரரும் மூன்றாமிடத்தினை ஏ.ஏ.ஏ.அஷான் அகமட் என்ற வீரரும் பெற்றுக் கொண்டனர். முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்ட வீரருக்கு பெறுமதி மிக்க துவிச்சக்கரவண்டியும், இரண்டாமிடம் பெற்ற வீரருக்கு 20 ஆயிரம் ரூபா பணப் பரிசும், மூன்றாமிடம் பெற்ற வீரருக்கு 10 ஆயிரம் ரூபா பணப் பரிசும்; வழங்கி வைக்கப்பட்டன.
இப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முசாரப் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தவிசாளர் ஏ.பி.மதன், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அனீஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஜெஸ்வத் இலாஹி, ஆட்டோ சங்கத்தின் தலைவர் ஏ.முஸம்மில், பொத்துவில் சைக்கிள் ஓட்ட சம்மேளனத்தின் தலைவர் கே.சுல்பிகார், செயலாளர் ஏ.எஸ்.எம்.சலீம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours