கல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் ஒழுங்கு செய்திருந்த 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான எறிபந்து ( Throw ball) போட்டியில் ஏறாவூர் மாக்கான் மாக்கார் தேசிய கல்லூரி தேசிய ரீதியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் கல்வி சமூகம் தேசிய ரீதியில் வெற்றியீட்டி ஏறாவூருக்கும் , மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், பயிற்சி வழங்கிய ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது
Post A Comment:
0 comments so far,add yours