(வி.ரி.சகாதேவராஜா)
கனடா
சுவாமி விபுலானந்தர் கலை மன்றம், கனடாவில் வாழும் காரைதீவைச் சேர்ந்த
பேராசிரியர் முனைவர் இளைய தம்பி பாலசுந்தரம் அவர்களுக்கு பெரும் பாராட்டு
விழா ஒன்றை இன்று (17) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கிறது.
பேராசிரியர்
முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்களுக்கான வாழ்நாள் செயல் திறங்களுக்கான
சிறப்பு பாராட்டு விழா இன்று(17) மாலை 5 மணிக்கு கனடா ஒன்றாரியோ தமிழ்
இசைக்கலா மன்றத்தில் நடைபெற இருக்கின்றது .
பேராசிரியர்
முனைவர் இளையதம்பி பாலசுந்தரம் கல்வியியலாளராகவும், துணிந்த
எழுத்தாளராகவும், ஆழ்ந்த ஆய்வாளராகவும்,தமிழ் இலக்கியம் மொழியியல் பண்பாடு
இந்து சமயம் சமூகம் போன்ற துறைகளில் கடந்த 50 ஆண்டுகளாக அயராது உழைத்து
செயல் திறன்கள் செய்த அறிஞர்.
இவர் இதுவரை 22 நூல்களை வெளியிட்டுள்ளார் அவர் பணிகளைப் பாராட்டி இப் பெருவிழா எடுக்கப்படுகிறது.
Post A Comment:
0 comments so far,add yours