நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (13) புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பின் அங்கத்தவர் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 179 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் இன்று வழங்கப்பட்டன.
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகள் மற்றும் சமுர்த்தி வங்கிகளின் நிதியின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் மாணவர்களுக்கு இத்திட்டத்தினூடாக பாடசாலை உபகரணங்களை வழங்கி வருகின்றன.
சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ.மஜீத் ஆகியோரின் வழிகாட்டலில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் கலந்து கொண்டார்.
அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு, சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.ஹிதாயா, கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours