(பாறுக் ஷிஹான்)



அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை மீறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் விபத்துக்களும் ஏற்படுகின்றன.

குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட முக்கிய சந்திகள் பொது இடங்களுக்கு முன்பாக வீதி சமிஞ்சைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீதி சமிஞ்சையை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டும் கூட பாதசாரிகள் முதல் வாகன சாரதிகள் துவிச்சக்கரவண்டியில் பயணிப்போர் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடுகளை காண முடிகின்றது.

இவ்வீதி சமிஞ்சைகள் உரிய செயற்பாட்டில் உள்ள போதிலும் துவிச்சக்கரவண்டியில் பயணிப்போர் நிறுத்தல் சமிஞ்சையில் அவ்விடத்தில் நிற்காது பயணம் செய்வதை காண முடிகின்றது.

இது தவிர சில மோட்டார் சைக்கிள் வாகன உரிமையாளர்கள் கூட வீதி சமிஞ்சை குறியீட்டை மதிக்காமல் அவசரமாக நிறுத்தாமல் பயணிப்பதுடன் வீதி விபத்துக்களை ஏற்படுத்தி தப்பி செல்கின்றனர்.

எனவே உரிய  அதிகாரிகள் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தி வீதி சமிஞ்சை குறியீட்டை மீறும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours