( நூருல் ஹுதா உமர், நிப்றாஸ் மன்சூர் )
உண்ணுவதற்கு ஆகுமான பிராணிகளை அறுப்பது தொடர்பான மார்க்க சட்டவிதிகளும் ஜீவகாருண்யமும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் ஏற்பாட்டில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் சனிக்கிழமை (2) நடைபெற்றது.
கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் தலைவர் மெளலவி அல் ஹாஜ் பி.எம்.ஏ. ஜலீல் (பாக்கவி) தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்கில் உலமாக்கள்,கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நிர்வாக சபையின் தலைவர் டாக்டர் அல்ஹாஜ் எஸ்.எம்.ஏ. அஸீஸ், சுகாதார பரிசோதகர்கள், கிராம சேவை அதிகாரிகள், கல்முனை, சாய்ந்தமருது, நற்பட்டிமுனை, மருதமுனை பிரதேசங்களிலிருந்து வருகைதந்த பிராணிகளை அறுப்பவர்கள் மற்றும் ஆடு, மாடு, கோழி இறைச்சி போன்றவற்ற விற்பனை செய்துவரும் வியாபாரிகள் உற்பட பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இவ்விழிப்புணர்வு கருத்தரங்கின் இறுதி நிகழ்வாக கல்முனை அஹ்லுஸ்ஸுன்னா வல்ஜமாஅத் உலமா சபையின் செயலாளர் ஏ.எல். நாஸர் மன்பயின் நன்றியுரையும் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours