(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற
இக்கூட்டத்தில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர், கமநல
சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள பிரதிப்
பனிப்பாளர், நீர்ப்பாசன திணைக்கள பனிப்பாளர், வனவிலங்கு திணைக்கள
உத்தியோகத்தர்கள், வன பரிபாலன சபை திணைக்கள உத்தியோகத்தர்கள், நெல்
சந்தைப்படுத்தல் அதிகார சபை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், வங்கி
உத்தியோகத்தர்கள், காப்புறுதி நிறுவன உத்தியோகத்தர்கள், விவசாய
அமைப்புகளின் தலைவர்கள், விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் என பலரும்
கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின் போது பெரும்போக பயிர்ச்செய்கைக்கான
ஆரம்ப வேலைகள் எப்போது இடம் பெற வேண்டும் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்பது
தொடர்பாக ஆராயப்பட்டு திகதிகளும் முன்வைக்கப்பட்டது.
அத்தோடு
இக்கூட்டத்தின் போது பண்ணையாளர்கள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்
காலத்தில் தங்களது கால்நடைகளை கொண்டு செல்வதற்கும் அதன் மூலம் ஏற்படும்
பாதிப்புகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தின் போது கருத்துக்களை முன்வைத்தனர்.
இதன்
போது கால்நடை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளில் நீதிமன்ற வழக்கு
தாக்கல்களுக்கு முகம் கொடுத்ததாகவும் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தாங்கள்
போலீஸ் தரப்பில் இருந்தும் பெற்றதாகவும் குற்றங்கள் முன்வைக்கப்பட்டது
இதற்கு தீர்வு வழங்கும் முகமாக இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில்
பிரதேச செயலாளரிடமும் கிராம சேவகர்களிடமும் உரிய தரப்பினர் தகவல்களினை
வழங்கி பிரச்சனைகளுக்கான விசாரணையினை முன்னெடுத்து உரிய தீர்வினை வழங்க
வேண்டும் எனவும் கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து விவசாயிகளுக்கான மானிய தொகை வழங்கும் விடயம் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டு உரிய முறையில் மானியம் வழங்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டது.
கடந்த போகத்தில் உரங்களுக்காக வழங்கப்பட்ட
பவுச்சரினை பயன்படுத்தி இதுவரையில் உரம் பெறாதவர்கள் உரிய கமநல சேவைகள்
திணைக்களத்துக்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதுடன்
பெரும்போக பயிர்ச்செய்கைக்கான உர விநியோகம் தொடர்பாகவும் உரிய முறையில்
இடம்பெறும் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.
இதனைத்
தொடர்ந்து பெரும் போக பயிர்ச்செய்கைக்காண விதை நெல்கள் உரிய முறையில்
உள்ளதாகவும் சிறப்பான முறையில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் உரிய
திணைகள் அதிகாரிகளினால் அறிவுறுத்தப்பட்டதுடன் விவசாய தினகலத்திடமிருந்த
தொகையினை வைத்து சோளம் பயறு நிலக்கடலை ஆகியவனை கொள்வனவு செய்யப்பட்டு
விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் இதன்போது குறிப்பிடப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து யானை தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக
கலந்துரையாடப்பட்டது இதன்போது யானை வேலிகளை பலப்டுத்தும் வேலை
திட்டத்திற்காக விவசாய அமைப்புகளினால் பணம் சேகரித்து கொடுக்கப்பட்டு
இன்னமும் அந்த வேலிகளுக்கான வேலைகள் இடம்பெறாமல் உள்ளமை தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours