(சுமன்)
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையினை உறுதிப்படுத்துமாறு கோரி நாளை (2023.09.21) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எட்டு மாவட்டங்களிலும் ஜனநாயகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு கிழக்கு ஒழுங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டமானது கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் காந்திப்பூங்காவிலும், அம்பாறையில் மல்வத்தை சந்;தியிலும், திருகோணமலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாகவும் கலை 10.00 மணிக்கு முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வடக்கிலும் ஐந்து மாவட்டங்களிலும் குறித்த நேரத்தில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours