(எம்.ஏ.றமீஸ்)

இம்முறை வெளியான உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைவாக, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவான லாபீர் பாத்திமா மர்வா என்ற மாணவி, தனக்கு கல்வி புகட்டிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரை கௌரவிக்கும் நன்றி நவிலல் நிகழ்வு  கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
அதிபர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது குறித்த மாணவிக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்கள், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பாடசாலையின் முகாமைத்துவ சபையினர், பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளர் சபூர் ஆதம், மாணவியின் பெற்றோர் எஸ்.எம்.லாபீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கிணங்க, குறித்த லாபீர் பாத்திமா மர்வா என்ற மாணவி அனைத்துப் பாடங்களிலும் ஏ தரச் சித்தி பெற்று இப்பாடசாலையில் இருந்து பல்கலைக்கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகும்  பெண் மாணவி ஆவார்.  
நன்றி உணர்வோடு தமது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் போன்றோரை கௌரவிக்கும் வகையில் இம்மாணவி தனது பெற்றோர் சகிதம் பாடசாலைக்கு நேரடியாக சமூகமளித்து தமது நன்றி வெளிப்பாட்டினை மேற்கொண்டமை எமக்கு மிகுந்த மகிழ்வினை ஏற்படுத்தியிருக்கிறது என அதிபர் ஏ.எச்.பௌஸ்  தெரிவித்தார்.
இதன் போது மாணவியினால் பாடசாலைக்கு  நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours