இன்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களை நானும் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவர் குகதாசன் அவர்களும் அவசரமாக சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் எமக்கான நேரம் தரப்பட்டது. இவ் சந்திப்பின் முக்கிய காரணம் மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் கால்நடை அமைப்புக்கள், பண்ணையாளர்களினால் தொடர்ச்சியாக நடந்துவரும் அறவழிப் போராட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தங்கள் போராட்டத்திற்கு வரவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக அவரிடம் ஆவணம் கையளிக்கப்பட்டது. எனிலும் இவ் காணிகளானது மகாவலி அதிகார சபைக்கு உட்பட்ட இவ் காணிகள் ஆனது ஆளுநரின் அதிகாரத்துக்கு அப்பாற்ப்பட்டு நேரடியாக கபினட் அமைச்சருக்குள் வருவதினால் இவ் பிரச்சனை சம்பந்தமாக ஆளுனரால் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியாது. அதே சமையம் இதற்கான தீர்க்கமான முடிவை எடுக்கும் நோக்கில் கபினட் அமைச்சர் அல்லது ஜனாதிபதியினை நேரடியாக சந்திக்க தீர்மானித்திருப்பதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதோடு திருகோணமலை மாவட்டம் சம்பந்தப்பட்ட தொல்பொருள் மற்றும் காடுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சம்பந்தமாகவும் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours