- யூ.கே. காலித்தீன் -
கல்லூரியின் பழைய மாணவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரிய தினமானது கல்லூரியின் முதல்வர் ஏ.பி. எப். நஸ்மியா தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பொன்னாடைகளையும் நினைவுச் சின்னங்களையும் வழங்கி கௌரவித்தார்.
மேற்படி நிகழ்வுக்கு கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், கல்முனை கோட்டக் கல்வி அதிகரி யூ.எல். றியாஸ் ஆகியோரோடு கல்லூரியின் பழைய மாணவியும் பிரதம அதிதியின் பாரியாருமான பாத்திமா ரோஷன் ஹரிஸ், பாடசாலை பிரதி, உதவி அதிபர்கள் ஆசிரிய ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு உரை நிகழ்த்திய பிரதம அதிதி எமது வரலாறையும் பெருமையினையும் நாம் விட்டுக் கொடுக்காமல் எமது பாடசாலையின் பெயருக்கு குந்தகம் விளைவிக்காமலும், பாடசாலையின் நன்மதிப்புக்கு எவ்வித விளைவும் வராமலும் நமக்குள் இருக்கின்ற வேறு பாடுகளை களைந்து விட்டுக் கொடுப்போடு நாம் அனைவரும் ஒருமித்து இப்பாடசாலையினை தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் வெற்றிபெற பாடுபட வேண்டும் எனவும்,
எமக்கான கலாசார விழுமியங்கள், பாரம்பரியம் போன்றவற்றை நாம் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்காமல் அனைவரும் ஒரே கூறையின் கீழ் இருந்து பாடு படவேண்டுமெனவும் கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours