( வி.ரி. சகாதேவராஜா)
காரைதீவு
விபுலானந்தா மத்திய கல்லூரியில் பயின்று 50 ஆவது அகவையை எட்டிய 1973
பிறந்த அணியினர் பொன்விழா நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர்.
பொன்விழா
அணியின் தலைவர் நாகலிங்கம் சசிதரன் தலைமையில் இப் பொன்விழா நிகழ்வு
காரைதீவு விபுலானந்த கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது..
முன்னதாக,
இவ்வணியினருக்கு 1989 இல் சாதாரண தரத்திலும் 1992 இல் உயர்தரத்திலும்
கற்பித்த ஆசிரியர்கள் 20 பேர் மாலை சூட்டி வரவேற்கப்பட்டார்கள்.
பின்னர் மேடையில் வரவேற்புரையை செயலாளர் சீ.திருக்குமார் நிகழ்த்த உபசெயலாளர் கண.தங்கநேசன் விளக்க உரையாற்றினார்.
தொடர்ந்து ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த
அணியின் உறுப்பினர்கள் தமது குடும்ப சகிதம் வந்து பொன்னாடை போர்த்தி பாத
நமஸ்காரம் செய்து பரிசு வழங்கி கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவித்தனர்..
அதேபோன்று 48 குடும்பங்களுக்கும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அதே ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள்.
சிறப்புரையை ஆசிரியர்கள் சார்பில் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார் .
அங்கு பட்டிமன்றம் கவிதை பாடல் போன்ற நிகழ்ச்சிகள் மேடை ஏறின.
பொன்விழா அணியைச் சேர்ந்த டாக்டர் இ. உதயகுமார் கவிதை வழங்க, பிரதேச செயலாளர் உதயசிறிதர் பாடல்களை பாடினார்.
மேலும் பல அங்கத்தவர்களும் பிள்ளைகளும் நிகழ்ச்சிகளை செய்தார்கள்.
விருந்துபச்சாரமும் இடம்பெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours