(அஸ்ஹர் இப்றாஹிம்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற நிகழ்வில் இந்த தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றன.

 சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக், நெறிப்படுத்திய தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், முகாமைத்துவப் பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.ஐ.ஹிதாயா கருத்திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, வலய உதவி முகாமையாளர் எம்.எஸ்.எம் நெளஷாத், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப். றிகாஸா ஷர்பீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த விருதினை பெறுவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் களான எம்.ஐ.அன்சார், ஏ.எம்.காலிதீன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர்களான ஏ.எம். நவாஸ், எஸ் எம் கமர்தீன் ஆகியோர் இவ்விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours