-நூருல் ஹுத்தா உமர்

கல்முனை சுகாதார பிராந்தியத்துக்குட்பட்ட நிறுவனத் தலைவர்களுக்கிடையிலான மீளாய்வுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை பணிமனையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பீ. ஏ வாஜித், வைத்திய அத்தியட்சகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்திய அதிகாரிகள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள் மற்றும் பணிமனையின் பிரிவு தலைவர்கள் பங்கு கொண்டிருந்தனர்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம். சி. எம். மாஹீர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கூட்டத்தில் சமகால பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் சுகாதார கட்டமைப்பை கொண்டு செல்லும் விதம் தொடர்பாகவும் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெறுகின்ற முறைப்பாடுகளை தீர்த்து வினை திறனான சேவையை வழங்குவது தொடர்பிலும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது 

கூட்டத்தின் இறுதியில் நிறுவனத் தலைவர்களிடம் தத்தமது நிறுவனங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் தொடர்பாகவும் தனித்தனியாக கேட்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours