( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை
ராமகிருஷ்ண மிஷனின் ஏற்பாட்டில் நிந்தவூரில் இடம் பெற்ற சத்சங்க நிகழ்வில்
இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ
மகராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிந்தவூர் ஶ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இந்து இளைஞர் மன்றத்தின் அனுசரணையில் இத் சத்சங்கம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
சத்சங்க நிகழ்வுக்கு கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மகராஜ்,
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஶ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மஹராஜ் ஆகியோர் வருகை தந்தனர்.
ஆலய வழிபாட்டையடுத்து சத்சங்கம் இடம்பெற்றது. அறநெறி மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours