(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
“வடகீழ்
பருவகால காலநிலைக்கான தயார்படுத்தல்” பிரதேச மட்ட கலந்துரையாடல்
மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (24) திகதி
இடம்பெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலக அனர்த்த
முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் தலைமையில்
நடைபெற்ற கலந்துரையாடலில், போரதீவுப்பற்று பிரதேசத்தில் வடகீழ் பருவ
பெயர்ச்சி மழைக்கான தயார்படுத்தல் நடவடிக்கையாக பிரதேச மட்டத்தில்,
அனர்த்தத்திற்கு தயார்படுத்தல் மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை போன்ற
பணிகளுக்கு முன்னாயத்த நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில்,
பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகுமார், நீர்ப்பாசன திணைக்களம், கம நல
அபிவிருத்தி திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல்
அதிகார சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பிரதேச
அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள்,
பொலிசார் என பலர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours