---- 

 சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் தட்சணா கௌரி தினேஷ் தலைமையில் (05) வியாழக்கிழமை முதலைக்குடா பாலையடி விநாயகர் ஆலய முன்றலில் "எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்" "ஆரோக்கியமிகு அகவையினை நோக்கி உலகளாவிய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மனித உரிமைகளை தலைமுறைகள் கடந்து நிறைவேற்றுதல்"எனும் வாக்கியத்திற்கு அமைய மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. 


 இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் முதியோர்கள் மாலைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்வில் ஆலய பிரதம குரு,உதவி பிரதேச செயலாளர் மேனகா புவிக்குமார் பட்டிப்பளை பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஷ்குமார்,சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,முதலைக்குடா விளையாட்டு கழக உறுப்பினர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் விளையாட்டுகளும் அதேபோன்று முதியவர்களின் கலை நிகழ்வுகளும் விளையாட்டுகளும் இடம் பெற்றதுடன் போட்டிகளில் பங்கு பற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours