( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை
கார்மேல் பற்றிமா கல்லூரியின் சர்வதேச ஆசிரியர் தின விழா இன்று(13)
வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில்
கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக அதிதிகள் வரவேற்கப்பட்டனர். கூடவே ஆசிரியர்களும் அவர்களது புதிய வர்ண சீருடையுடன் மாலை சூட்டி வரவேற்கப்பட்டார்கள்.
பின்னர் மேடை நிகழ்ச்சிகள் மேடை ஏறின.
கல்முனை வலய கணக்காளர் ஹபிபுல்லா சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
ஆசிரியர்கள்
பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள் கூடவே இம்முறை கராத்தே போட்டியில் தேசிய
ரீதியில் வெண்கலப்பதக்கம் பெற்ற பற்றியா மாணவன் கேதீஸ்வரன் ரோஹித் பாராட்டி
கௌரவிக்கப்பட்டார்.
பயிற்றுவிப்பாளர்களும் பாராட்டப்பட்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours