(எஸ்.அஷ்ரப்கான்)
கல்முனை
ஹுதா அழைப்பு வழிகாட்டல் பணியகம், ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் தஃவா
குழுவினரின் ஏற்பாட்டில் மாபெரும் விசேட மார்க்க ஒன்றுகூடல் ஹூதா ஜும்ஆ
பள்ளிவாசலில் பேஷ் இமாம் ஜே.எம்.ஸாபித் (ஸரயி, றியாதி) அவர்களின்
வழிகாட்டலில் நேற்று (06) மாலை இடம் பெற்றது.
முக்கியமான மூன்று தலைப்புக்களை உள்ளடக்கியதாக நடந்த
இவ்
ஒன்றுகூடலில், கண்ணியமிக்க உலமாக்களான அஷ்-ஷெய்க் ஆதில் ஹஸன்- "முந்தைய
உலக வாழ்வை விட பிந்திய மறுமை வாழ்வே சிறந்தது" எனும் தலைப்பிலும்,
அஷ்-ஷெய்க் பிர்னாஸ் (மன்பஈ) - "அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடை நபிகள் நாயகம் (ஸல்) அலைஹி வஸல்லம் அவர்கள் " எனும் தலைப்பிலும்,
அஷ்-ஷெய்க் அனஸ் (ஹாமி) "வெற்றியின் பக்கம் விரைந்து வாருங்கள்" எனும் தலைப்பிலும் உரையாற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours