- யூ.கே. காலித்தீன் -

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (G.M.M.S)
ஆசிரியர் தின நிகழ்வுகள்
(21) ம் திகதி மிகவும் கோலாகலமாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் ஆசிரிய குழுவினரால்  ஒழுங்குசெய்யப்பட்ட இவ் நிகழ்வானது பல கலை நிகழ்ச்சிகளும், அவினயங்களும் ஆசிரிய ஆசிரியைகளால் நிகழ்த்தப்பட்டது.

இதற்கு பிரதம அதிதியாக 
கல்முனை வலயக் கல்வி பணிமனையின்
பாடசாலை, நலன்புரி பிரதம  நிர்வாகத்துக்கு பொருப்பான
பிரதிக் கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் கலந்து கொண்டார், 

கௌரவ அதிதிகளாக கணக்காளர் வை. ஹபிவுல்லா, பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.றியாசா, 
பி. ஜிஹானா,  துணைக் கல்வி பணிப்பாளர் 
என் வரணியா, சாய்ந்தமருது பிரதேச வலயக் கல்வி பணிப்பாளர் என்.எம்.ஏ.மலிக், உதவிக் கல்வி பணிப்பாளர்களான திருமதி ஏ. ஏ. மலிக், 
எல்.எம். சஜித், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.வி.எம். முஜீன், ஈ.பி.எஸ்.ஐ. இணை ஒருங்கிணைப்பாளரும் வளவாளருமான எஸ்.எம். அன்சார் ஆகியோரோடு பாடசாலையின் அபிவிருத்தி குழுவின் நிறைவேற்றுச் செயலாளருமான பொறியியளார் எம்.ஐ.எம். றியாஸ், செயற்குழு உறுப்பினர்களான இஸட். ஏ. அஸ்மீர், எம்.சி.எம். ஹஸீர் ஆகியோரும் பாடசாலையின் உதவி அதிபர் எம்.ஏ.சி.எல். நஜீம் மற்றும் பகுதித் தலைவர்கள் உள்ளீட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நினைவு பரிசில்களும்
அதிபர், பிரதி அதிபர் ஆசிரிய,  அதிதிகளுக்கும் ஏ.வி.எஸ். சிமாட் நிறுவனத்தின் பணிப்பாளர். ஏ.ஏ. அஷ்ரப் அலியின்  அனுசரனையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் விடுமுறை எடுக்காத முன்மாதிரியான ஆசிரிய ஆசிரியைகளுக்கு அதிதிகளினால் சாண்றிதழ்களும் பரிசில்களும்
வழங்கி கௌரவிக்கப்பட்டமை நிகழ்வில் விசேட அம்சமாகும். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours