(எம்.எம்.றம்ஸீன்)
கல்முனை அல் பஹ்ரியா தேசிய பாடசாலையில் 2024ஆம் ஆண்டில் உயர்தரம் கற்கவிருக்கும் மாணவர்களுக்காக வழிகாட்டல் ஆலோசனைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 05 நாள் உளவியல் உளவளத்துணை பயிற்சிப் பட்டறை பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம்.பைசால் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப்பாதையில வளவாளராக பாடசாலைதின் பழைய மாணவரும் சிரேஷ்ட உளவளத்துணையாளருமான என்.எம்.நௌஸாத் கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் கே. சாந்தகுமார், பிரதி அதிபர் எம்.ஏ.சலாம், உயர்தரப்பிரிவின் பகுதித் தலைவர் யூ.எல்.செய்னுலாப்தீன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர் ஏ.எம்.ஜனூன் நௌஸாத் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours