தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே 90 வயதை பூர்த்தி செய்துள்ள இரா.சம்பந்தன்இ இவ்வாறு உணர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் இரா.சம்பந்தன் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடத்திற்கு தீர்வை வழங்குவதாக ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் கூறியிருந்த போதிலும் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு மிக விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்றும், அதற்கான கருமங்களை முன்னெடுக்கப்பட தாம் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours