(எஸ்.அஷ்ரப்கான்,

யு.கே.காலிதீன்)

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் அமைப்பான Zahiriyan Legend Primer League (ZLPL) அமைப்பின் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி தொடர்  சனி மற்றும் ஞாயிறு (04,05) ம் திகதிகளில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மைதானத்தில்
ஆரம்பமாகவுள்ளது.

இக்கிரிக்கெட் சமரில்  Legend 90, 
Legend 91, 
Legend 92, 
Legend 93, 
Legend 95 and 
Legend 96  ஆகிய
06 அணிகள் பங்கு கொள்ளும் அதேவேளை 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இச்சுற்றுப் போட்டி  நடைபெறவுள்ளது.

இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடைபெறவுள்ள  இச்சுற்றுப்போட்டிக்கு பிரதம அநு சரணையினை சஹ்ரியன் 93 | 96 அணியின் பொறியியலாளர் சித்தீக் பரீட் வழங்கியுள்ளதுடன் அவர் பிரதம அதிதியாகவும்,
கெளரவ அதிதியாக பாடசாலையின் அதிபர் எம்.ஏ.ஜாபீர் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இணை அனுசரணையினை கல்முனை  பிரதேசத்தின்  வர்த்தகர்கள் பலர் இணைந்து வழங்கியுள்ளளமை குறிப்பிடத்தக்கது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours