பெரிய நீலாவணை தொடர்மாடியில் சமூகசேவகர் உமாச்சந்திரன லண்டனில் வசிக்கும்; அவர்களது முயற்சியினால் இலவசமாக நாடாத்தப்படும் மாலை நேரவகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இளவயதினரைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடு அண்மையில் இடம்பெற்றது. அத்தோடு கிறிஸ்மஸ் புதுவருடநிகழ்வும் இடம்பெற்றது.
பெரியநீலாவணை 01 அன்னையர் ஆதரவுக்குழுவினர் மற்றும் சிறுவர்களின் முற்றுமுழுதான நிகழ்ச்சி தயாரிப்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வைத்தியர் என்.ரமேஸ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களான தாதிய பரிபாலகி இ பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் பங்குபற்றி ஊக்கப்படுத்தினர் அத்துடன் அவர்களிற்கு பரிசுப் பொருட்களையும் வழங்கினார்கள். இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் தற்போதைய சூழ்நிலையில் இளம்பராயத்தினரை போதைப்பொருள் பாவனை இளவயதுத்திருமணம் மற்றும் வேறு அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாதாந்தம் நடைபெறும் செயற்பாடுகளில் ஒன்றாகவே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours