( காரைதீவு நிருபர் சகா)
அக்கரைப்பற்றை சேர்ந்த வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இன்று(11) வியாழக்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் 700 பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகல் போசனம் பொதியாக வழங்கப்பட்டது.
ஆலையடிவேம்பு நாவற்காடு கோளாவில் பனங்காடு போன்ற பிரதேசங்களில் வெள்ளத்துள் தத்தளிக்கின்ற மக்களுக்கு நேரடியாக இந்த பகல் போசனம் வழங்கப்பட்டது .
காரைதீவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் லோகநாதன் கஜரூபன் தலைமையிலான இளைஞர் குழுவினர் இந்த பகல் போசனத்தை அவர்கள் காலடிக்கு சென்று வெள்ளத்துக்குள் நின்று வழங்கினார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours