எஸ்.சபேசன்


அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் தாய்ச் சங்கமான ADVRO ( UK) பிரித்தானியா அமைப்பு அண்மையில்  அம்பாறை மாவட்டத்தில்  இடைவிடாது கொட்டித் தீர்த்த கோர மழையினாலும், சேனநாயக்க சமுத்திரம் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களைக் கருத்திற் கொண்டு ஆலையடி வேம்பு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட  63 குடும்பங்களுக்கும் கல்முனை வடக்குப் பிரதேச எலலைக்குட்பட்ட துரவந்தியமேடு கிராமத்திலுள்ள 72 குடும்பங்களுக்கும், பெரியநீலாவணையில்  நீர் வடிந்தோடும் கேணியின் தாழ்நிலப் பகுதியை அண்டிய 18 குடும்பங்களுக்குமாக ஒவ்வொன்றும் ஆறாயிரம் (6000/-) ரூபா பெறுமதியான  உலருணவுப் பொதிகளை தமது பொங்கல் பரிசாகக் கருதக்கூடிய வெள்ள நிவாரணமாக  (14.01.2024)  வழங்கியுள்ளது. 

சுமார் பத்துலட்சம் ரூபா மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இப் பணியை அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வு அமைப்பின் இலங்கைக் கிளை( ADVRO SL) தலைவர் திரு. கா.சந்திரலிங்கம், ஓய்வுபெற்ற அதிபர் அவர்களும், செயலாளர் திரு. கண. வரதராஜன், ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், பிரதித் தலைவர் ஓய்வு பெற்ற எந்திரி திரு. தே. சர்வானந்தன் அவர்களும், நிருவாக சபை உறுப்பினர் திரு. எஸ்.மாதவன்பிள்ளை, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களும் முன்னெடுக்க சமூக சேவகர்கள் பலரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர் சிலரும் வேண்டிய இடங்களில் உதவியும் ஒத்துழைப்பும் நல்கினர்.காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணிவரை நிவாரணப் பணி தொடர்ந்தது.
























Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours